திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரம்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை வல்லி மாறு இலா வகை மலர்ந்த பேர் அன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும் திரு உளம் கொளப் பெருகியது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி