திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன்
வன் திறல் புலி இமயமால் வரை மேல் வைக்க ஏகுவோன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்யத் திருந்து காதம் நான்கு உட்பட வகுத்துக்
குன்று போலும் மா மதில் புடை போக்கிக் குடி இருத்தின கொள்கைய