திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனியச் செழும் தாமரைத் தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்த செங்குவளை பைங் கமலம் நண்பகல் பகல் தரும் பாடலம் அன்றிக்
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயாப் புளி உளதால்.