திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அலகு இல் நீள் தவத்து அறப் பெரும் செல்வி அண்டம் ஆம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறந்த பேர் உலகம்
மலர் பெருந்திருக் காமக் கோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே