திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்க ஓர் திரு விளையாட்டில் கனம் குழைக்கு அருள் புரிந்திட வேண்டி
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல் வரக் கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்.