திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தேவ தேவனும் அது திரு உள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்.