திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சு ஆம் தடம் ஒன்று
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அவ் உரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால்.