திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாடத்து துரமியங்கள் பொலிய நின்று
மா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத்
தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும் சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகி