திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம்
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்துச்
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி.

பொருள்

குரலிசை
காணொளி