பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த திருப் பரப்பையும் உடையது அத் திரைக் கடல் வரைப்பு.