திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திருச் சேடியர் ஆன
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணையக் குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி அம்பி காவனம் ஆம் திரு வனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்