திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவுஇல் இன்பத்தின் அருட் கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரி சடையார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திரு விளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப்
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன் மலை வல்