திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கம்பர் காதலி தழுவ மெய் குழையக் கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்பு உலா மலர் நிறைய விண் பொழியக் கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி