திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாயும் விடை அரன் தில்லை அன்னாள், படைக்கண் இமைக்கும்,
தோயும் நிலத்து அடி; தூமலர் வாடும்; துயரம் எய்தி
ஆயும் மனனே! அணங்கு அல்லள்; அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல், பெரும் பணைத்தோள், இச்சிறுநுதலே.
அணங்கு அல்லள் என்று அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்து உரைத்தது.

பொருள்

குரலிசை
காணொளி