திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன், தில்லைச்சிற்றம்பலத்து ஒருத்தன்
குணம்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக் கொடியிடை தோள்,
புணர்ந்தால் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்
மணம்தாழ் புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றதே.
ஆரா இன்பத்து அன்பு மீதூர
வார் ஆர் முலையை மகிழ்ந்து உரைத்தது

பொருள்

குரலிசை
காணொளி