பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத் தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்தட மால்வரைவாய்க் கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக்கண் ணாரளிபின் வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே.