திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளைபயில் கீழ்கடல் நின்றுஇட, மேல் கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத், தில்லைத்தொல்லோன் கயிலைக்
கிளைவயின் நீக்கி, இக்கெண்டையம் கண்ணியைக் கொண்டு தந்த
விளைவை அல்லால், வியவேன், நயவேன், தெய்வம், மிக்கனவே.
அன்ன மென்நடை அரிவையைத் தந்த
மன்இருந் தெய்வத்தை மகிழ்ந்து உரைத்தது.

பொருள்

குரலிசை
காணொளி