பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல் மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையும் மேனிவைத்தான் வான்றோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே.