பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏனற் பசுங்கதி ரென்றூழ்க் கழிய எழிலியுன்னிக் கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா யானிற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச்சென்றேன் தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லுஞ் செல்லல்களே.