திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
சொற்பால் அமுது இவள், யான்சுவை , என்னத் துணிந்து இங்ஙகனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று; நான் இவள் ஆம் பகுதிப்
பொற்பு ஆர் அறிவார்? புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பில்
கல் பாவிய வரைவாய்க் கடி தோட்ட களவுஅகத்தே.
கொலை வேலவன் கொடியிடையொடு
கலவி இன்பம் கட்டுரைத்தது .