திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூரண பொற்குடம் வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே.

பொருள்

குரலிசை
காணொளி