திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
அகல்கின்ற அல்குல்தடம் அது கொங்கை அவை; அவம் நீ
புகல்கின்றது என்னை? நெஞ்சு! உண்டே இடை; அடையார் புரங்கள்
இகல்குன்ற வில்லில் செற்றோன், தில்லை ஈசன், எம்மான், எதிர்ந்த
இகல் குன்றப் பல்உகுத்தோன், பழனம் அன்ன பல்வளைக்கே.
வண்டு அமர் புரிகுழல் ஒண்தொடி மடந்தையை
நயந்த வள்ளல் வியந்து உள்ளியது.