பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ் சூணுந் திருத்து மொருவன் திருத்தும் உலகினெல்லாங் காணுந் திசைதொறுங் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம் பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே.