அங்கண் மலைத் தடம் சாரல் புனங்கள் எங்கும்
அடல் ஏனம் புலி, கரடி, கடமை, ஆமா,
வெங் கண் மரை, கலையொடு, மான், முதலாய் உள்ள
மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத்
‘திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று
சின வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று,
தங்கள் குல முதல்