திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றுஅவர் காணா முன்னே,
அங் கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல, நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருஇல் அன்பு உருவம் ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி