திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நின்ற முது குறக்கோலப் படிமத்தாளை
நேர் நோக்கி, ‘அன்னை! நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ’ என்று கூறும்
நாகன் எதிர், நலம் பெருக வாழ்த்தி, ‘நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளை வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன்;