திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும்
திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு,
‘மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை
மகன் போகக் காடு பலி மகிழ ஊட்டத்
தலை மரபின் வழி வந்த தேவராட்டி
தனை அழைமின்’ என, அங்குச் சார்ந்தோர் சென்று,
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை