திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல்லையில் இட்டுக்
காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சித்
தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி