திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செங் கண் வெள் விடையின் பாகர்; திண்ணனார் தம்மை ஆண்ட
அங் கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தம் கண் முன் இடக்கும் கையைத் தடுக்க, மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற.

பொருள்

குரலிசை
காணொளி