பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓடி எறிந்து, வார் ஒழுக்கி யோசனைப் பரப்பு எலாம் நெடிய திண் வலைத் தொடக்கு நீள் இடைப் பிணித்து, நேர் கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின், செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்.