திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக்
கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு
மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு,
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து
தாழத் தழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப்
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்க