திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செங் கண் வயக் கோள் அரி ஏறு அன்ன திண்மை
திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெங் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று,
விடை கொண்டு, புறம் போந்து, வேடரோடும்
மங்கல நீர்ச் சுனை படிந்து, மனையின் வைகி,
வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலைப்
பொங்கு சிலை