திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயமும்
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களி கூறும் காலைக்
கரு வரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொரு வரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்.

பொருள்

குரலிசை
காணொளி