திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகக்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி,
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி