பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெங் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்; செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா அங்கு எழு சிரம் உருவிய பொழுது, அடல் எயிறு உற, அதனைப் பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்.