திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாரணச் சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பு அணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடு வேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேர் அணங்கு ஆடல் செய்து, பெருவிழா எடுத்த பின்றை.

பொருள்

குரலிசை
காணொளி