திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ் உழி, அதிரக்
கை வரைகலும் வெரு உற மிடை கான் எழுவதொர் ஏனம்
பெய் கருமுகில் என, இடியொடு பிதிர் கனல் விழி சிதறி்,
மொய் வலைகளை அற, நிமிர்வுற முடுகிய கடு விசையில்.

பொருள்

குரலிசை
காணொளி