பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார்; மீள, இந்தப் பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து, மச்சு இது செய்தார் யாரோ ? என்றலும் மருங்கு நின்ற அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்.