திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என, நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்,
அடல் உறு சரம் உடல் உற வரை அடி இடம் அலமரலால்,
மிடை கரு மரை கரடிகெளாடு விழுவன வன மேதி.

பொருள்

குரலிசை
காணொளி