திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு இவன் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா வல் உடும்பு என்ன நீங்கான்;
இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்;
நம் குலத் தலைமை விட்டான்; நலப்பட்டான் தேவர்க்கு என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி