பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு அழல் உறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால அழகிது; நாயனீரே! அமுது செய்து அருளும் என்றார்.