பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் மாதர் ஆர் திலகவதியாரும் அவர் பின் வந்த காதலனார் மருள் நீக்கியாரும் மனக் கவலையினால் பேது உறு நல் சுற்றமொடும் பெருந்துயரில் அழுந்தினார்.