பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன் என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்.