பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள் வாயில் வணங்குவார்.