வன்னி, கொன்றை, வழை, சண்பகம், ஆரம், மலாப் பலாசொடு செருந்தி, மந்தாரம்
கன்னி காரம், குரவம், கமழ் புன்னை, கற்பு பாடலம், கூவிளம் ஓங்கித்
துன்னு சாதி, மரு, மாலதி, மௌவல், துதைந்த நந்தி, கரம் வீரம், மிடைந்த
பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ