திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நின்று கோபுரத்தை நிலம் உறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி,
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி, மன்னிய திருப்பதி அதனில்,
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சிக்
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.