திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பி னோடும்,
வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்;
அன்று முதல் அடியார்கள் எல்லாம் ‘தம்பிரான் தோழர்’என்றே அறைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி