திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வாழிய மா மறைப் புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்குத்
‘தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம்; நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர
வாழி! மண் மேல் விளையாடுவாய்’ என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே.