திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தேம அலங்கல் அணி மாமணி மார்பின் செம்மல், அம் கயல்கள் செங் கமலத்தண்
பூமலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவித்
தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி.