திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
என்று இன்னனவே பலவும் புகலும் இருள்ஆர் அளகச் சுருள் ஓதியையும்
வன் தொண்டரையும் படிமேல் வர, முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார்
சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்,
‘அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால் அருளி.